டயர் வெடித்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த வேன்! 4 பெண்கள் உள்பட 6 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வேன் கவிழ்ந்து 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். 

சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

விருதுநகர் மாவட்ட மாதாங்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பினர். தாயில்பட்டி ராமசந்திரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, அவர்கள் பயணித்த வேனின் டயா் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (50), மணிகண்டன் (34), இருவம்மாள் (65), அமுதா (45) மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த போத்தையா (65) குருலட்சுமி (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், கிருஷ்ணசாமி (56), அய்யம்மாள் (50), சந்தியா (32), ராசம்மாள் (55), காளியம்மாள் (33), சுகுமார் (55),கங்காதேவி (45),அபிஷேக் (11), பானுமதி (38), கங்கா காவியா (16),மனோஜ்(6),முத்துலட்சுமி (24),பொம்மாயி (65),சுப்புத் தாய் (55),வள்ளிநாயகன் (32),மாரியம்மாள் (51) ஆகிய 16 பேர்  படுகாயமடைந்தனர்.  காயமடைந்தவர்களுக்கு  மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!