`ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம்' - தம்பிதுரை பேச்சு!

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியுள்ளார்.

தம்பிதுரை

கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, இன்று வந்தார். நிகழ்ச்சிகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தம்பிதுரை,  ``ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கொள்கை, கோட்பாடு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சமூக நீதிக்கட்சியின் மூலம் தந்தை பெரியார் பிற்படுத்தப்பட்ட  மக்களுக்களின் உரிமைக்காகப் போராடியது. அந்த வழியில் வந்துதான் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் போராடினார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் தான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடியது. தொடர்ந்து அப்பணிகளை அ.தி.மு.க செயல்படுத்தும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியம் குறித்து போராடி வருகிறார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசைத் தமிழக அரசு ஆதரிக்காது. அவர்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கு அ.தி.மு.க அரசு நல்ல முடிவை மேற்கொள்ளும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!