வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (14/05/2018)

கடைசி தொடர்பு:11:36 (14/05/2018)

விற்பனைக்கு வந்துள்ளது மாருதி எர்டிகாவின் லிமிட்டட் எடிஷன்

மாருதி சுஸூகி தனது எர்டிகாவின் லிமிட்டட் எடிஷன் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. என்னென்ன மாற்றங்கள் உள்ளது என பார்ப்போம்...

மாருதியின் புதிய எர்டிகா விற்பனைக்கு வரக் காத்திருக்கும் நிலையில் தற்போது பழைய எர்டிகா சில மாற்றங்களுடன் லிமிட்டட் எடிஷனாக விற்பனைக்கு வந்துள்ளது. எர்டிகாவின் ஸ்பெஷல் எடிஷனின் பெட்ரோல் இன்ஜின் மாடல் ரூ.7.80 லட்சம்; டீசல் இன்ஜின் ரூ.9.71 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைகளில் வந்துள்ளன. எர்டிகாவின் V வேரியன்ட் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஸ்டான்டர்ட் மாடலை விட 14,000 கூடுதல் விலையில் வருகிறது. காரில் வெளி மற்றும் உள்புற அழகு மாற்றங்கள் மட்டுமே உள்ளது. மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை.

எர்டிகா / ertiga limited edition


Exquisite Maroon, Silky Grey மற்றும் Superior White என மூன்று நிறங்களில் வருகிறது இந்த கார். பனி விளக்குகள் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் க்ரோம் சேர்க்கப்பட்டுள்ளது. அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர் மற்றும் லிமிட்டட் எடிஷன் லோகோவும் வெளிப்புற மாற்றங்களாக வந்துள்ளது. இன்டீரியரை பொருத்தவரை வெள்ளை பார்டருடன் அடர் சிவப்பு சீட் கவர் வருகிறது. டூயல் டோன் சீட் கவர், பார்க்க மர வேலைப்பாடுகள் போல இருக்கும் பிளாஸ்டிக் சென்டர் கன்சோல், முன் பக்க ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஆம்பியன்ட் லைட் புதிதாக வந்துள்ளன.

ertiga limited edition


எர்டிகாவின் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 92bhp பவர் தரக்கூடியது, 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் 90bhp பவர் தரக்கூடியது. இரண்டுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் வருகிறது. பெட்ரோல் இன்ஜினில் மட்டும் நான்கு ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. புதிதாகவும், பெரிதாகவும் வரவிருக்கும் இரண்டாம் தலைமுறை எர்டிகாவில் 104bhp பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் K15B இன்ஜின் வரவுள்ளது.

தற்போது எர்டிகா வாங்கும் முடிவில் உள்ளவர்கள் அவசரம் இல்லையென்றால் இரண்டாம் தலைமுறை எர்டிகாவுக்ககா காத்திருக்கலாம். நவம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.