பாரதிராஜாவுடன் மீண்டும் களமிறங்கும் விஷால் அதிருப்தியாளர்கள்...! | barathiraaja questions vishal's actions

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (14/05/2018)

கடைசி தொடர்பு:02:15 (14/05/2018)

பாரதிராஜாவுடன் மீண்டும் களமிறங்கும் விஷால் அதிருப்தியாளர்கள்...!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்த தயாரிப்பாளர்களும், விஷாலின் அதிருப்தியாளர்களுமான ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைப்பெற்ற வேலைநிறுத்தமும், சங்கத்துக்குப் புதிதாக தொடங்கப்பட்ட அலுவலகத்துக்கு அனுமதியும் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டி நடைபெற்றதா என்ற கேள்விகளை முன்னிறுத்தியும் விஷால் பதவி விலகவேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் தமிழர்கள்தான் இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முன் வைத்து ஆலோசனைக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது.

விஷால் அதிருப்தியாளர்கள்

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் ராதாரவி, இயக்குநர் பாரதிராஜா, ஜே.கே.ரித்திஷ்  "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல்போது கொடுத்த வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றவில்லை, தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிப்பதாகக் கூறிய விஷால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வைப்புநிதி 7 கோடி என்னவாயிற்று" என சரமாரி கேள்விகளின் எழுப்பினர். இதுகுறித்து அரசாங்கத்தின் உதவியை நாடப்போவதாகவும் கூறினர். ஏற்கெனவே, ஆர்.கே நகர் தேர்தலின் போது இவர்கள் விஷால் அரசியலுக்கு செல்லகூடாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.