வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (14/05/2018)

கடைசி தொடர்பு:08:41 (14/05/2018)

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் பதில் என்ன? #vikatanSurveyResult

ஓர் ஆண், திருமண வயதான 21-ஐ அடையாவிட்டாலும் 18 வயது நிறைந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு உரிமை உள்ளது என்று கடந்த 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் பதில் என்ன? #vikatanSurveyResult

ர் ஆண், திருமண வயதான 21-ஐ அடையாவிட்டாலும் 18 வயது நிறைந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது' என்று கடந்த 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

திருமணம்

உச்ச நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பு தொடர்பாக ``திருமணம் செய்துகொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாமா?'' என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என்று 54.8% பேரும், சரி என்று 39.1% பேரும் கூறியுள்ளனர். மேலும், இந்த தீர்ப்புக்கு கருத்து இல்லை என்று 6.1 % பேர்  பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டால்? அதனை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று 81% பேர் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற உறவுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும்... அதற்கான பதில்களும்...

சர்வே ரிசல்ட் திருமணம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்