கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு - சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த டூ வீலர் சாகசம் | Awareness on Coast Guard

வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (14/05/2018)

கடைசி தொடர்பு:08:23 (14/05/2018)

கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு - சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த டூ வீலர் சாகசம்

இந்தியக் கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் மேற்கொண்ட கடற்படை வீரர்கள் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் இடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

 இந்தியக் கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொண்ட கடற்படை வீரர்கள், தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் இடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு

இந்திய கடற்படையின் சார்பில் கடலோர பகுதிகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக 25 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நாட்டின் மேற்குப் பகுதியான ஜாம் நகரில் இருந்து கிழக்குப் பகுதியான கொல்கத்தா இடையிலான கடலோரப் பகுதிகள் வழியாக இந்திய கடற்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள் சாகசப் பயணம் மேற்கொண்டனர்.

இந்திய கடற்படை வீரர்கள் சாகச பயணம்

 ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் மூலமாக இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராமநாதபுரம் அருகே உள்ள இந்தியக் கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். பருந்துவுக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுநாள் ஐ.என்.எஸ். பருந்து கமாண்டர் குல்தீப் ஹெச் டாங்சல் அங்கிருந்து இந்தப் பயணத்தை  கொடியசைத்து துவக்கி வைத்தார். அங்கிருந்து பாம்பன் சாலைப் பாலம் வழியாக தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்குச் சென்ற கடற்படை வீரர்கள் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடற்படை சேவைகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.