ஊட்டி ரோஜா கண்காட்சி - சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜா பூங்காவில், 16 வது ரோஜா கண்காட்சி மே 12, 13 என இரண்டு நாள்கள் நடந்தது.

ரோஜா பூங்கா


கண்காட்சியில் 30,000 சிவப்பு ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட ‘இந்தியா கேட்’, சிவப்பு மற்றும் ஊதா நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட ‘சோட்டா பீம்’, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 5,000 சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்டிருந்த படகு, மதுரை மற்றும் ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த காளை மற்றும் வண்ண மயில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. அதுமட்டும் அல்லாது கறுப்பு மற்றும் பச்சை நிற ரோஜா மலர்கள் காட்சியரங்கில் வைக்கப்பட்டிருந்தன. 

இது குறித்து, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை சார்பில் ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடந்த 16 வது கண்காட்சியைச் சுமார் 40,000 சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். ரோஜா கண்காட்சி மட்டுமல்லாது, 30,000-க்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகள் வருகை சரிந்துள்ளது. எனினும், வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ள மலர் கண்காட்சியைப் பார்த்து ரசிக்க அதிக சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!