வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (14/05/2018)

கடைசி தொடர்பு:13:45 (14/05/2018)

மேற்கு வங்காளத் தேர்தலில் வன்முறை - பா.ஜ.க வேட்பாளருக்குக் கத்திக்குத்து

மேற்கு வங்காள மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்லில் நடந்த கலவரத்தில் சிக்கி 20 பேர் படுகாயமடைந்தனர். பா.ஜ.க வேட்பாளர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க

மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தத் தேர்தல் நடத்தப்படுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

பா.ஜ.க தேர்தல்


இந்த நிலையில், பாதுகாப்பையும் மீறி பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. பாங்கர் பகுதியில், பிரபல தொலைக்காட்சி நிறுவன வாகனத்தை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களைச் செல்ல அனுமதிக்கவில்லை. 

பா.ஜ.க  தேர்தல் கலவரம்


பிர்பராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களைச் செல்லவிடாமல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்குள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் வந்திருப்பதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பா.ஜ.க வேட்பாளரான ராஜூ பிஸ்வாஸ் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கத்தியால் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், பானிஹாட்டி மாநில பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.