Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`இது என்ன பாட்டு சொல்லுங்க..?’ - ஜெயக்குமாரை யோசிக்க வைத்த மீம்ஸ்

அரசியல் பரபரப்புக்கும் அதிரடி கருத்துகளுக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கும் தீனி போடுபவர் அமைச்சர் ஜெயக்குமார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க தரப்பில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாகப் பதில் அளிக்கக்கூடியவர். இதனால் இவரைப் பற்றி மீம்ஸ்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. 

ஜெயக்குமார்

“நான் என்ன பேசினாலும் அதை வைத்து மீம்ஸ் போட்டுக் கிண்டலடிக்க சிலரை ஸ்டாலின், தினகரன் ஆகியோர் சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை வைத்திருக்கிறார்கள்” எனக் கடந்தாண்டு பரபரப்பு கிளப்பினார். ஆனாலும், அவரைப் பற்றிய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வந்தன. கடந்த மாதம், “என்னைப் பற்றி மீம்ஸ் போடுவோர் குறித்து கவலை இல்லை. மீம்ஸ் உருவாக்கி, சமூக வலைதளங்களில் பெண்களைத் தரக்குறைவாகக் கமென்ட் செய்பவர்கள் உண்மையான ஆண்மகனாக இருந்தால், பெயர், செல்போன் எண்ணுடன் பதிவிடுங்கள்” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று, `தன்னை பற்றி வந்த மீம்ஸ் ஒன்று என்னை யோசிக்க வைத்துவிட்டது. யாராவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்’ என வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அந்த மீம்ஸை அனுப்பி இருக்கிறார். அதில், “பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை, ஜாலி எல்லாம் கலந்ததுதானே. அப்படி என்னை மேலும், ஜாலியாக மாற்றியுள்ளது, கீழே உள்ள இந்த மீம்ஸ். என்னுடைய படத்தைப் போட்டு, அது எந்தப் பாடல் என்று ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார். நானே யோசித்துப் பார்க்கிறேன், அது எந்தப் பாடலாக இருக்கும் என்று. இத்தகைய மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக்கொள்வதே என்னுடைய குணம். இதற்காகவெல்லாம் வருத்தப்பட மாட்டேன். ஆனால், இதுபோன்ற மீம்ஸ்களுக்காகச் செலவிடும் நேரத்தில் ஆக்கபூர்வமான வேறு ஏதாவது பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதே என்னுடைய அறிவுரை. இருந்தாலும், இது எந்தப் பாடல் என்று யோசனை எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். தெரிந்துகொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய மீம்ஸ்

அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்ட அந்த மீம்ஸ்...

நாமும் அந்தப் மீம்ஸை வைத்து பலமுறை யோசித்துப் பார்த்தோம். பாரதிராஜா தன் மகனை வைத்து எடுத்த `தாஜ்மஹால்’ படத்தில் வந்த பாடல்தான் நம் நினைவுக்கு வந்தது. 

இப்போதாவது குழப்பம் தீர்ந்ததா அமைச்சரே! 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement