காவல் நிலையத்துக்கு எதிரிலேயே மணல் கொள்ளை! ஆட்சியரிடம் சென்ற புகார்

மதுரை சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மாரியப்பன் தலைமையில்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சோழவந்தானில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி மனு அளித்தனர். 

மதுரை சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மாரியப்பன் தலைமையில்,  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சோழவந்தானில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி மனு அளித்தனர். 

மணல் கொள்ளை புகார்

அந்த மனுவில்,"மதுரை வாடிப்பட்டி சோழவந்தான் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள வைகை ஆற்றின் வடக்குக் கரையோரத்தில், ஆற்றுப் புறம்போக்கு நிலத்தை விவசாயத்திற்காக செம்மைசெய்து, உபரி மண்ணை அப்புறப்படுத்துவதாகக் கூறி சிலர் அனுமதிபெற்றனர். ஆனால், இப்போது அந்தப் பகுதியிலிருந்து தினமும் 150 லோடு மண்ணை லாரியில் கடத்திவருகின்றனர். இது சம்பந்தமாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதில், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மணல் அள்ளுவதால், சோழவந்தான் மக்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசை ஏமாற்றி ஆற்று மணலைக் கொள்ளையடித்து, வைகை ஆற்றைச் சீரழிக்கும் இந்தக் கும்பலைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மாரியப்பன் கூறுகையில், சோழவந்தான் காவல்நிலையத்துக்கு எதிரே இந்த மணல் கொள்ளை நடப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் எனத் தெரிவித்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!