Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`காவிரி விவகாரத்தில் அரசு சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம்!’ - சி.பி.எம் வலியுறுத்தல்

Cuddalore: 

காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ``உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பல்வேறு காலதாமதம் செய்து வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு திட்ட அறிக்கையைப் பெற்று உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதில், விவாதிக்கப்படும் கருத்துகளைக் கொண்டு வரைவுத் திட்டத்தை ஏற்கலாமா என முடிவு செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு 
தவணைகளை உச்ச நீதிமன்றத்தில் வாங்கி, இறுதியாக இன்று (14.5.2018) வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே,
பிப்ரவரி 16-ம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு மத்திய அரசு 
கர்நாடகத்தில் தேல்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களைச் சந்திக்க முடியாத நிலையில்
மத்திய அமைச்சரவையைக் கூட்ட முடியவில்லை. பிரதமரின் ஒப்புதலையும் பெறவில்லை என்று கூறி மத்திய அரசு காலம் தாழ்த்தி 
வந்தது. தற்போது கர்நாடகத் தேர்தல் முடிந்த நிலையில் திட்ட அறிக்கையைப் பிரதமர் மற்றும் அமைச்சரவை 
ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தைக் கர்நாடகத் தேர்தலைக் காட்டி மத்திய மோடி அரசு 
ஏமாற்றியுள்ளது என்று இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே மத்திய அரசுத் திட்டமிட்டு இந்தக் காலதாமதத்தை ஏற்படுத்தியிருப்பதை
ஏற்க முடியாது. எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நாளையே (15.5.2018) கூட்ட வேண்டும்.
மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வரைவுத் திட்ட நகலை வழங்க வேண்டும். அந்த வரைவுத் திட்டத்தின் நகல்களை 
தமிழக அரசு அனைத்துக்கட்சிகளுக்கும் வழங்கி, அனைத்துக்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து அதன்படி வரைவுத் திட்ட 
அறிக்கையை ஏற்பதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து அம்சங்களும் நிறைந்த 
அதிகாரம் பொருந்திய வரைவுத் திட்டமாக இது இருக்க வேண்டும். இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 
உள்ள நீர்நிலைகள், அணைகளை நிர்வகிக்கும் திறன் பெற்றதாக இந்த வாரியம் அமைய வேண்டும். அப்படி இல்லையென்றால் 
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைப்பது சிரமம்தான். கடந்த பிப்ரவரி 16-ல் மத்திய அரசு, வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்திருந்தால்
இந்நேரம் வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். தற்போது வரும் 16-ம் தேதிக்குமேல் நீதிமன்ற விடுமுறை வருகிறது. 
இறுதி நாளில் தாக்கல் செய்து, வழக்கை இழுத்தடிக்கும் அநீதியை மத்திய அரசு செய்கிறது’’ என்றார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement