`அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்!’ - லைக்கா நிறுவனம் விளக்கம்

இணையப் புலனாய்வு பத்திரிகை ஒன்று தமிழ் ராக்கர்ஸும் லைகாவும் ஒன்றுதான் என விஷால் கண்டுபிடித்துவிட்டதாகவும், அதை மறைக்க விஷால் லைக்கா நிறுவனத்திடம் டீல் பேசியிருக்கிறார் என்றும் விளக்கமாகக் கூறியிருந்தது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் தொடர்புள்ளதாகவும், இரண்டு நிறுவனத்தின் இணையதளத்துக்கும் ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதைப்பற்றித் தெரிந்துகொண்ட விஷாலை லைக்கா நிறுவனம் பேரம் பேசியதாகவும் இணையப் புலனாய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது. 

இது தொடர்பான ஒரு விளக்கக் கடிதத்தை லைக்கா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ஆன்லைன் பைரசி இணையதளத்துக்குச் சம்பந்தமுடையதாகக் கூறப்படும் lycamovie.com மற்றும் lycamovies.com ஆகிய இணைய முகவரிகள் 2014 ம் ஆண்டு மே, ஜூன் மாதத்தில் தமிழ் தமிழன் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2014 ஜுன் 29ம் தேதிக்குப் பிறகு இரண்டு இணையதளங்களிலும் எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் காலத்தில் லைக்கா குழுமம் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனத்துக்கும் இந்த இணையத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை. இதன் பிறகு lycamovies.com புதுப்பிக்கப்பட்டும், மற்றொரு இணையதள பெயரான lycamovie.comஐ யாரும் புதுப்பிக்காமல் இருந்திருக்கிறது.  

கார்ப்பரேட் நிறுவனக் கொள்கையாக, நிறுவனத்தின் பெயரில் அமைந்த lycamovie.com என்ற இணைய முகவரியை 2017 ம் ஆண்டு ஜூலை 5 ம் தேதியே லைக்கா நிறுவனத்தின் lycaproductions.inகாக இணைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். அதாவது லைக்கா நிறுவனத்துக்கும் பைரசி இணையதளங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

மேலும், லைக்கா நிறுவனம் பைரசிக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிறது. சொந்தத் தயாரிப்புப் படங்களுக்கே பைரசியைத் தடுக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்தச் செய்தியை வெளியிட்ட அந்த இணையப் புலனாய்வு பத்திரிகை எங்களிடம் விளக்கம் கேட்காமலேயே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. லைக்கா நிறுவனத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்த இணையப் பத்திரிகையின் மீதும் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் செய்திகள் பரப்பிய மற்ற ஊடகங்களும், பத்திரிகையாளர்களின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
                 

 

 

 

          லைக்கா

 

லைக்கா நிறுவனம் 2.0, சபாஷ் நாயுடு, வடசென்னை, இந்தியன் 2 ஆகிய படங்களுடன், சூர்யாவின் பெயரிடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறது. அடுத்து `காலா' திரைப்படத்தை வெளியிடவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!