`காவிரி வரைவு திட்டத்துக்கு எதிர்ப்பு' - மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்! | dyfi members protest against central government for cauvery issue

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (15/05/2018)

கடைசி தொடர்பு:02:30 (15/05/2018)

`காவிரி வரைவு திட்டத்துக்கு எதிர்ப்பு' - மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு பட்டியலை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் தலைமை தபால் நிலையம் எதிரே பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அதையடுத்து காவல் துறையினர் 36 பேரை கைது செய்தனர்.

இதுபற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பிரவீன் பேசுகையில்,   ``உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமாக வரைவு பட்டியல் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதிலும் கூட தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கும் வகையில் செயல்படுத்தி இருக்கிறது.

இந்த வரைவு பட்டியலில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரையே குறிப்பிடாமல், அணைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், அதை மத்திய நீர்வள குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கர்நாடக தண்ணீர் தர வழிவகை செய்யாமல் கர்நாடக செயல்பட ஒத்துழைத்து இருக்கிறது.

மோடி அரசாங்கம் வந்ததில் இருந்து தமிழகத்தை ஒரு பராமுகமாக செயல்பட்டு வருவதோடு, தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகத்தைச் செய்து வருகிறது. இதனால் தமிழக மக்களுக்குத் குடிப்பதற்கு கூடத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்திருக்கிறோம்'' என்றார்.