காவிரி வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கக் கோரி கர்நாடகாவுக்கு நடைப்பயணம் -த.ம.ஜ.க வினர் கைது!

காவிரி வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சியிலிருந்து கர்நாடகாவுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற த.ம.ஜ.க வினர் கைது செய்யப்பட்டனர். 
காவிரி
காவிரி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்வதில் நம்பிக்கை இல்லை, எனவே, அவ்வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து கர்நாடகவுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்றனர். ஆனால் ,அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள்  முழக்கங்களை எழுப்பினர்.
 
பிறகு அக்கட்சியின் தலைவர் ஷெரிஃப்,  “காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல்செய்துள்ள வரைவு அறிக்கையில் நம்பிக்கை இல்லை" என்றார். காவிரிக்காக நடந்த இந்தப் போராட்டத்தில் கர்நாடகாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டவர்களைக் கைது செய்யப்பட்டது, திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை உண்டாக்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!