Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சிதம்பரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Cuddalore: 

கடலூர் மாவட்டம்  சிதம்பரத்திலிருந்து புதுச்சேரிக்கு இன்று காலை, தனியார்  பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.  விழுப்புரம் மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஓட்டியுள்ளார்.  

அதிவேகமாகச் சென்ற பேருந்து, புவனகிரி திருவள்ளூர் நகர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம்செய்த 18 ஆண்கள்,  8 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 26 பேர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த புவனகிரி போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

சிதம்பரம்


இதேபோல இன்று காலை, சென்னையைச் சேர்ந்தவர்கள்  மதுரைக்கு சுற்றுலா சென்றுவிட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரை அடுத்த கூத்தக்கூடியில், எதிரே வந்த மணல் லாரிமீது வேன் மோதியது.

இதில், வேனில் பயணம்செய்த சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச்  சேர்ந்த பிரிட்டோவின் மனைவி தேன்மொழி (40) என்பவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். வேனில் பயணம்செய்த 13 பேர் காயமடைந்து  உளுந்தூர்ப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த விபத்துகுறித்து வேப்பூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement