உலகக்கோப்பை: களமிறங்கும் நெய்மர், டேனி ஏல்வியஸ் `அவுட்!’ #worldcup2018 | Neymar confirmed in Brazil's World Cup team

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (15/05/2018)

கடைசி தொடர்பு:15:30 (15/05/2018)

உலகக்கோப்பை: களமிறங்கும் நெய்மர், டேனி ஏல்வியஸ் `அவுட்!’ #worldcup2018

காயமடைந்த பிரேஸில் சூப்பர் ஸ்டார் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை: களமிறங்கும் நெய்மர், டேனி ஏல்வியஸ் `அவுட்!’ #worldcup2018

ஷ்ய உலகக்கோப்பைத் தொடருக்கான பிரேஸில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, டேனி ஏல்வியஸ் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக, ரைட் பேக் பொசினில் ஆட ஃபாக்னர், மான்செஸ்டர் சிட்டியின் டேனிலோ ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

நெய்மர்

பிப்ரவரி 25-ம் தேதி காயமடைந்து போட்டிகளில் விலகியிருக்கும் நெய்மருக்கு, அணியில் இடம் கிடைத்துள்ளது. ஜூன் மாதத்துக்குள் நெய்மர் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று பிரேஸில் அணியின் டாக்டர் ரோட்ரிகோ லாஸ்மர் தெரிவித்துள்ளார்.
ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேஸில் அணி, ஜூன் 17-ம் தேதி, முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, லிவர்லில் ஜூன் 3- ம் தேதி குரோஷியாவுடனும் ஜூன் 10-ம் தேதி வியன்னாவில் ஆஸ்திரியாவுடனும் இரு பயிற்சி ஆட்டங்களில் பிரேஸில் ஆடுகிறது. 

பிரேஸில் அணியின் 23 வீரர்கள் விவரம்

கோல்கீப்பர்கள் - அலிஸன், எடர்ஸன், கேஸினோ

தடுப்பாட்டம் - மார்ஸிலோ, டேனிலோ, ஃபிலிஃப் லூயிஸ், ஃபாக்னர், மெர்கியூன்கோஸ், தியாகோ சில்வா, மிராண்டா, பெட்ரோ, ஜெர்மோயல்.

நடுகளம் - வில்லியன், ஃபெர்டினான்டோ, பவுலின்கோ, காஷ்மீரா, பவுலின் ஹட்டின்ஹோ, ஃப்ரெட், அகஸ்டோ

முன்களம் - நெய்மர், கேப்ரியல் ஜீஸஸ், ராபர்ட்டோ ஃபிர்மினோ, டக்ளஸ் கோஸ்டா, டைசன்.

பயிற்சியாளர் : டிடே

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க