12 மணிநேர கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத்! - கவனத்தை ஈர்த்த கேன்ஸ் விழா

71-வது 'கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்', கடந்த மே 8-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், ஹ்யுமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கனா ரனாவத், சோனம் கபூர், தனுஷ் போன்ற பலர் கலந்துகொண்டனர். இதில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தன்னை 12 மணிநேர கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மற்றும் வன்முறைகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறார்.
 

மல்லிகா ஷெராவத்

சர்வதேச அரசு சாரா அமைப்பான 'Free A Girl India'-வின் தூதராகச் செயல்படும் இவர், தன்னை 12x8 அளவுகொண்ட சிறிய ஜெயிலில் தன்னை அடைத்துக்கொண்டுள்ளார். 

மல்லிகா ஷெராவத்

இதுகுறித்து மல்லிகா, " கேன்ஸ் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9-வது வருடம். இந்த விழாவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினால்,  உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும். இப்படி என்னை ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்துக்கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு பெண்களும் குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறினார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!