அதிகாரிகள் அலட்சியத்தால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

வீடுகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா அதிரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கேத்தி பாலாடா சுப்பையா பாரதி நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன.

இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தினக் கூலிகளாக உள்ளனர். இவர்களின் குடியிருப்பு மிகவும் சரிவான பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த கன மழையின்போது, ஏற்பட்ட மண் சரிவால் ஒரு சில வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வீடுகளில் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வருகின்றனர். இதேபோல குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் நடை பாதையும் சேதமடைந்துள்ளது, அங்கு வசிப்பவர்களைக் கடும் அவதிக்குள்ளாகச் செய்கிறது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த சுப்பையா பாரதி நகர் பகுதிக்கு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பல முறை கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்து, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளைப் பெற்றோம். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால், வீடுகள் சில அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கன மழை பெய்யும்போது, இங்குள்ள வீடுகள் மழையில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!