`பொன்.ராதாகிருஷ்ணன் எங்கள்மீது பழிபோடுகிறார்’ - தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கொதிப்பு | Central Minister Pon.Rathirakrishnan blames us, says MLA's

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (15/05/2018)

`பொன்.ராதாகிருஷ்ணன் எங்கள்மீது பழிபோடுகிறார்’ - தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கொதிப்பு

வர்த்தக துறைமுகத் திட்டத்தில் எங்கள்மீது பழிபோடும் விதமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செயல்படுவதாகக் குமரி மாவட்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குற்றம்சாட்டினர்.

ர்த்தக துறைமுகத் திட்டத்தில் எங்கள்மீது பழிபோடும் விதமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செயல்படுவதாகக் குமரி மாவட்டத் தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குற்றம்சாட்டினர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் நாகர்கோவிலில் இன்று பேட்டி அளித்தனர்

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் நாகர்கோவிலில் இன்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடல் அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் கடலலை தடுப்பணைகள் ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வர்த்தக துறைமுகம்தான் குமரி மாவட்டத்துக்கு வேண்டும். மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஐந்து ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதிலும் வர்த்தக துறைமுகத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கவில்லை. ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அவர்கள் துறைமுகம் கொண்டு வருவதாகவும் அதைக் குமரி மாவட்டத்தின் 6 எம்.எல்.ஏ-க்களும் தடுப்பதாகவும் எங்கள் மீது பழிபோடும் விதமாக மத்திய அமைச்சர் செயல்படுகிறார்.

கடந்த முறை ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு போராட்டம் நடத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்து போடுவதாகச் சொன்னார். ஆனால், இதுவரை ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. அதை மறைக்கும் விதமாகத் துறைமுகத் திட்டத்தை வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் நாடகமாடுகிறார். எனவே, ஒகி புயல் நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கடல் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். சரக்குப்பெட்டக மாற்று முனையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என 6 எம்.எல்.ஏ-க்களும் குமரி கலெக்டர் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மனு அளித்தோம். மாவட்டல் பிரச்னைகளை எடுத்துக்கூறி எந்தப் பயனும் இல்லாததால் 19-ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்" என்றனர்.