வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (15/05/2018)

கடைசி தொடர்பு:18:15 (15/05/2018)

ஃப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை பலி - சென்னையில் சோகம் 

குழந்தை

 சென்னையில் ஃப்ரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலபாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கால் டாக்ஸி டிரைவர். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு தஷிகா என்ற மகளும் பிரதீஷ் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர். வீட்டில் பிரதீஷ் இன்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் அருகில் அவர் சென்றார். அதை யாரும் கவனிக்கவில்லை. 

 இந்தச் சமயத்தில் திடீரென பிரதீஷ் தூக்கிவீசப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "விளையாடிக்கொண்டிருந்த பிரதீஷ், ஃப்ரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியைத் தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்" என்றனர். 

 பிரதீஷை இழந்த அவரின் குடும்பம் மட்டுமல்லாமல் அந்தப் பகுதியே சோகமயமாகியுள்ளது.