மலர் கண்காட்சிக்குத் தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 18-ம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஊட்டி மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது, அதற்காகப் பல வண்ண மலர்த் தொட்டிகள் காட்சித்திடலில் அடுக்கி வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 18-ம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஊட்டி மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. அதற்காகப் பல வண்ண மலர்த் தொட்டிகள் காட்சித்திடலில் அடுக்கி வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாவரவியல் பூங்கா

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “இந்தாண்டு மலர்க்காட்சியைத் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். வரும்18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பம்சமாக இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பர் ஃபுளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், 
ஓரியண்டல் லில்லி, க்ரைசாந்திமம், காஸ்மாஸ் ட்வார்ப், வின்கா, காம்ப்ரினா, கேம்பனுலா, கைலார்டியா க்ளேடியோலஸ், கேல், சினரேரியா, க்ளாக்சீனியா செலோசியா என 1,500 மலர் தொட்டிகள் 185 ரகங்கள் பொதுமக்களின் ரசனைக்கு ஏற்றாற்போல் அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மலர் காட்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப் பூங்காவில் சுமார் 20,000 பல வண்ண மலர்த் தொட்டிகள் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!