`மக்கள் கோரிக்கைகளை அரசு கேட்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்..!’ கொந்தளித்த கமல்

``ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுக்கப்பட்டதே மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கான முதல்படியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்

மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நாளை 16.5.2018-ம் தேதி புதன்கிழமை முதல் 18.5.2018-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காகத்தான் இந்தப் பயணம். பயணத்தில் மக்கள், அவர்களின் குறைகளைச் சொன்னால் அதைக் கேட்பேன். யாராவது குறைகளைக் கேட்கத்தானே வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்திருப்பதே மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கான முதல்படியாக எடுத்துக்கொள்ள வேண்டும். போராடும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு என்றுமே உண்டு.

இனியும் மக்களின் கோரிக்கைகளை அரசு காதுகொடுத்து கேட்காவிட்டால் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடையும். எழுத்தாளர் பாலகுமாரன் என் நீண்டகால நண்பர். சிறந்த எழுத்தாளர். சினிமாவில் மட்டுமல்ல இலக்கியத்திலும் சிறந்தவர். நாங்கள் இருவரும் சேர்ந்தே சினிமாவுக்கு வசனம் எழுதி இருக்கிறோம். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது' என்றார். காரில் கன்னியாகுமரிக்குச் செல்லும் அவர், நாளை காலை காந்திமண்டபம் முன்பிருந்து தன் மக்களைச் சந்திக்கும் சுற்றுப் பயணத்தைத் தொடங்க உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!