தேசியக் கட்சிகளின் கோட்டையில் முத்திரை பதிப்பாரா கமல்..!

தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை சுற்றுப் பயணம் செய்யும் கமலுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை சுற்றுப் பயணம் செய்யும் கமலுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

கமல்ஹாசன்

கன்னியாகுமரி மாவட்டம் தேசியக் கட்சிகளின் கோட்டையாக விளங்குகிறது. காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் தொண்டர்பலம் அதிகம். அதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அல்லது காங்கிரஸ் வெற்றிபெறும் அல்லது இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெற்றிபெறும். இதே நிலைதான் சட்டசபைத் தேர்தலிலும் உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று (1.5.20185) மாலை கன்னியாகுமரி வருகிறார்.

அவருக்கு விவேகானந்தபுரம் ஜங்ஷனில் மாலை 6 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு கன்னியாகுமரியில் தங்கும் கமல் நாளை காலை 9 மணிக்கு காந்தி மண்டபத்திலிருந்து பயணத்தைத் தொடங்குகிறார். காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி ரயில்வே சந்திப்பு, 10 மணிக்கு தென் தாமரைக்குளம் 10.30 மணிக்கு கீழமணக்குடி, 11 மணிக்கு ராஜாக்கமங்கலம் 11.30 மணிக்கு திங்கள் சந்தை, 12 மணிக்கு குளச்சல் செல்லும் அவர் அங்கு மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்குகிறார்.

மாலை 3.30 மணிக்கு கருங்கல், 4 மணிக்கு சின்னத்துறை, 4.30 மணி களியக்காவிளை, 5 மணி மேல்புறம், 5.30 மணி அழகிய மண்டபம், 6 மணி தக்கலை, 6.30 மணிக்கு நாகர்கோவிலிலும் பேசுகிறார். பின்னர், மீண்டும் கன்னியாகுமரி சென்று ஓய்வெடுக்கிறார். 17-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு காவல்கிணறு, வள்ளியூர் வழியாகத் தூத்துக்குடி செல்கிறார் செல்கிறார். தேசியக் கட்சிகளின் கோட்டையில் கமல் சாதிப்பாரா, அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!