போலீஸுக்குப் பளார் விட்ட பா.ம.க பிரமுகர்! மதுராந்தகம் காவல்நிலையத்தில் பரபரப்பு!

மதுராந்தகம் காவல்நிலைய வளாகத்தில் பன்னீர் செல்வம் என்ற காவலரை பா.ம.க பிரமுகர் ஒருவர் தாக்கிய சம்பவம் காஞ்சிபுரம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

காஞ்சிபுரம் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம், மானாம்பதி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் பன்னீர் செல்வம். மதுராந்தகத்தில் வசித்துவரும் தங்கையின் குடும்பப் பிரச்னை காரணமாக நேற்று இரவு மதுராந்தகம் காவல்நிலையம் சென்றுள்ளார். சமாதானம் பேச வந்த பன்னீர் செல்வத்திற்கும், எதிர்தரப்பில் இருந்த பா.ம.கவைச் சேர்ந்த சபரி என்பவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோபமடைந்த சபரி தகாத வார்த்தைகளால் பன்னீர் செல்வத்தை மிரட்டல் விடுத்ததாகவும், அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காவல்நிலைய வளாகத்திலேயே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. 

காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானிஇதனால் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் மதுராந்தகம் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானிக்குப் பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி “காவல்நிலையத்தில் வந்து ஒரு காவலரை ரவுடி அடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இன்னும் 24 மணிநேரத்தில் அவரைப் பிடிக்கவேண்டும்” என மதுராந்தகம் காவல்துறையினரிடம் கடுமையாகப் பேசி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சபரியை மதுராந்தகம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். 

காவல் நிலைய வளாகத்திலேயே காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதுராந்தகம் காவல்துறையினர் மெத்தனமாக இருந்திருப்பது காஞ்சிபுரம் காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!