அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தின் பெயர் வெளியீடு !

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படத்தின் பெயர் வெளியானது

பாடலாசிரியரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் எடுக்கப்போகிறார் என்றும் அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தும் விதமாக, படத்தின் பூஜையில் அருண்ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் இருந்தனர்.

அருண்ராஜா காமராஜ் படம்

அந்தச் சமயத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு `கனா' எனப் பெயரிட்டு அதற்கான ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டது படக்குழு.  விளையாட்டுச் சார்ந்த படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதுவும், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதாலும் அருண்ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணி என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!