சர்க்கரைக்கு மேல் வரிவிதிப்பு - மத்திய அரசின் முடிவுக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

சர்க்கரை மீதான 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி போக மேல் வரியாகக் கிலோ ஒன்றுங்கு மேலும் 3 ரூபாய் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த 4-ம் தேதி நடைபெற்ற 27வது ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டத்தின் போது, சர்க்கரைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி போக மேல் வரியாகக் கிலோ ஒன்றுங்கு மேலும் 3 ரூபாய் விதிக்க மத்திய அரசு கருத்து கேட்டது. ஆனால் அதற்குத் தமிழக அரசு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தைத் தொடர்ந்து மேலும் சில மாநிலங்களும், இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இதுதொடர்பாக மேலும் ஆலோசிக்க மாநில அமைச்சர்கள் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்தது. இதில், தமிழ்நாடு, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் இடம்பெற்றனர். 

இக்குழுவின் ஆலோசனை கூட்டம் திங்கள் கிழமை டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சர்க்கரைக்கு மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பதனை மத்திய சட்ட அமைச்சகத்திடம் இருந்து ஜிஎஸ்டி அமைப்பு வாங்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்துவற்கு முன் சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை குறித்த விவரங்களை இக்குழுவிற்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் ஜூன் 3-ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!