வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (16/05/2018)

கடைசி தொடர்பு:07:39 (16/05/2018)

தெலுங்குப் பட ரீமேக்கில் நடிக்கும் விஷால்!

விஷால், நடிக்கும் அடுத்தப் படத்திற்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். தகவல் திருட்டை மையமாக வைத்து, விறுவிறுப்பாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பல பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறது.

விஷால்

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெம்பர்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் விஷால். பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில், பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருந்தார். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படம் ரிலீஸானது. ஜூனியர் என்.டி.ஆர் இந்தப் படத்தின் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கினார்.

தற்போது `டெம்பர்’ படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ஹீரோவாக விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘சைத்தான் கே பச்சா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து ராஷி கண்ணா நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் இது.