வெளியிடப்பட்ட நேரம்: 02:59 (16/05/2018)

கடைசி தொடர்பு:03:07 (16/05/2018)

இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் அரவிந்த் சாமி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்ததின்போது கதை எழுதி, தற்போது திரைக்கதையும் எழுதிக்கொணிடிருக்கிறார், அரவிந்த் சாமி.

நடிகர் அரவிந்த் சாமி, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். அரவிந்த் சாமி நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக். 

அர்விந்த் சாமி

மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தைத் தொடர்ந்து, ‘சதுரங்க வேட்டை 2', ‘நரகாசூரன்' ‘வணங்காமுடி’, ‘செக்கச் சிவந்த வானம்’ என அரவிந்த் சாமிக்கு 4 படங்கள் இருக்கின்றன. இந்த நான்கிலுமே தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் ஆசையான இயக்குநர் அவதாரத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கான முயற்சியிலும் இறங்கத் தொடங்கிட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தின்போது தன்னுடைய தனிமை நேரத்தை கதையெழுதப் பயன்படுத்தியிருக்கிறார். எழுதிய கதைக்கு தற்போது திரைக்கதை வடிவமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார், அரவிந்த் சாமி.