'பெஃப்சி தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டப்படும்' - ஆர்.கே செல்வமணி

பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், 

பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  

ஆர் கே செல்வமணி

அப்போது பேசியவர், ``பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிதியைக்கொண்டும் மற்ற சங்கங்களின் நன்கொடையை கொண்டும் சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பையனூரில் 6 கோடி செலவில் 10,000 சதுர அடி நிலப்பரப்பில் படப்படிப்புத் தளம் ஒன்று அமைக்க திட்டமிட்டிருக்கிறது. அதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தமிழக முதவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். பெஃப்சியின் முன்னாள் நிர்வாகி வி.சி.குகநாதன் அவர்கள் ஆசைப்பட்டது போல, பெஃப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைத்து தரவும் திட்டமிட்டுள்ளோம். 

அதன் முதற்கட்டமாக அன்றைய தினத்தில் 640 குடியிருப்புகள் கட்டவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். ஒவ்வொரு ப்ளாக்கிற்கும் 80 குடியிருப்புகள் வீதம் 8 ப்ளாக்குகளில் 640 குடியிருப்புகள் கட்டப்படும். அதில் முதல் ப்ளாகிற்கு விஜய் சேதுபதி உதவியதால் அவர் பெயரும், இரண்டாவது ப்ளாகிற்கு சிவகார்த்திகேயன் உதவியதால் அவர் பெயரும் வைக்க போகிறோம். 100 ஆண்டு தாண்டியும் நிற்கக்கூடிய இந்த கட்டிடத்துக்கு உதவ யார் வேண்டுமானாலும் முன் வரலாம்.  இந்தியாவிலே பெரிய படப்பிடிப்பு தளமாக இது இருக்கும். இதை திரைப்பட நகரமாக அமைக்க உருவாக்க முயற்சிகள் செய்து வருகிறோம். தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கும் படங்களை வெளியில் சென்று எடுப்பதை விட இங்கேயே எடுத்தால் இங்கே இருக்கும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!