ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்! #LiveUpdates

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம்:

விருதுநகர் -97.05%

ஈரோடு -96.35%

திருப்பூர் -96.18%

நாமக்கல் - 95.75%

கடைசி இடத்தில் விழுப்புரம் மாவட்டம்(83.35%) உள்ளது 

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் பாடவாரியாக தேர்ச்சி சதவிகிதம்!

கணிதம் 96.19% பேர் தேர்ச்சி

இயற்பியல் - 96.44%

வேதியல் -95.02%

உயிரியல் - 96.34%

தமிழ் - 96.85%

ஆங்கிலம் - 96-97% 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  238 அரசு பள்ளிகள் 100 %  தேர்ச்சி! 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 மதிப்பெண்களுக்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 பேர் எடுத்துள்ளனர். இதில் 50 பேர் மாணவர்கள், 181 பேர் மாணவிகள்  

97 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்
 1,907 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.  

ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தமிழகத்தில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1% குறைவு!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை இன்று காலை வெளியாக உள்ள நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

செங்கோட்டையன்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை இன்று காலை வெளியிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் தயாராகிவருகிறது. 

கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிய ப்ளஸ் டூ தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் இத்தேர்வை எழுதினர். இந்தத் தேர்வுக்கான ரிசல்ட் இன்று அறிவிக்கப்படவுள்ளது. மாணவர்களின் மன உளைச்சலைத்  தவிர்க்க ரேங்க் முறை ரத்து செய்யப்படுகிறது எனக் கடந்த ஆண்டே அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டும் ரேங்க் முறைப்படி தேர்வு முடிவுகள்  வெளியாகாது. அதேநேரத்தில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அல்லது சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணைய தளம் மூலம் ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம். 

காலை 9.30  மணிக்குப் பிறகு மாணவர்களின் செல்போனுக்கு மதிப்பெண்கள் அனுப்ப தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்துகொள்ளலாம்.  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ஆகிய  இணைய தளங்களில் மாணவர்கள் முடிவுகள் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,   அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!