`கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம்’ - கரூரில் புதிய முயற்சி

         
 

 

இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள கரூரில் முதன்முதலாக ரூ.39.72 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சி.சமயமூர்த்தி ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் ரூ.39.72 லட்சம் மதிப்பில் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளத்தை திறந்து வைத்து ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுவதை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், அரசு முதன்மைச் செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான சி.சமயமூர்த்தி தெரிவித்ததாவது: "தமிழகத்தில் 2.50 கோடி வாகனங்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 7000 வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதிக வாகனம் உற்பத்தியும் பதிவும் உள்ளதால் சாலை விபத்துகளை குறைப்பதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகிறது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தரமான சாலைகள் அமைந்துள்ளன. அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் மிக வேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் நடைபெற்று வருகிறது. அதைக் குறைப்பதற்காக மிகத் துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை படிப்படியாக 14 நகரங்களில் அமைக்கப்படவுள்ளது. தலைக்கவசத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் அணிந்து சாலை விதிகளைக் கடைப்பிடித்து விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட முன்வர வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!