வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (16/05/2018)

கடைசி தொடர்பு:12:25 (16/05/2018)

ப்ளஸ் டூ தேர்வு! - கரூர் மாவட்டத்தில் 93.85 சதவிகிதம் தேர்ச்சி

 

தேர்வு

கரூர் மாவட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வில் 93.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13-வது இடம் பிடித்துள்ளது. ப்ளஸ் டூ தேர்வு எழுதிய 5,470 மாணவர்கள் 5,807 மாணவிகள் என 11,277 பேர்கள் தேர்வு எழுதியதில் 5,054 மாணவர்கள், 5,529 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.85 சதவிகிதமாகும். கடந்த ஆண்டைவிட 1.11 சதவிகிதம் தேர்ச்சி குறைவாகும். இதில் மாணவர்கள் 92.39 சதவிகிதம் மாணவிகள் 95.21 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கரூர் மாவட்டம் ப்ளஸ் டூ தேர்வில் 93.85 சதவிகிதம் பெற்று மாநில அளவில் 13-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இதே 13-வது இடம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் அதேபோல, கரூர் மாவட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வில் அரசுப் பள்ளிகள் 90.24 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கருர் மாவட்டத்தில் 50 அரசுப் பள்ளிகளில் இருந்து 5,235 மாணவ-மாணவிகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் 4,724 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இது 90.24 சதவிகிதமாகும்.