கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தலைமறைவு? - சித்தராமையா விளக்கம்

பெங்களுருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பெங்களுருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பெங்களுருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தலைமறைவு? -  சித்தராமையா விளக்கம்

பெங்களூருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சித்தராமையா

கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது. முல்பாகல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும் மற்றொரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால். பெங்களூரு ஜெயநகர் தொகுதி தேர்தலும் முறைகேடு நடப்பதாக எழுந்த புகார் காரணமாக ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியமைக்க வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்  இன்று காலை தொடங்கியது.

கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நிச்சயம் பங்கேற்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 4 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. அந்த எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

அதேவேளையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சித்தராமையா, ``அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தொடர்பில் உள்ளனர்.  எந்த எம்.எல்.ஏவும் மாயம் ஆகவில்லை'' என்று  கூறியுள்ளார். 

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!