`அன்புக்கு நன்றி; இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும்’ - நெகிழ்ந்த கமல்!

நான் கன்னியாகுமரிக்கு முதலில் வரும்போது எனக்கு மீசைகூட சரியாக முளைக்கவில்லை என மக்கள் சந்திப்பு யாத்திரையில் கமல் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

நான் கன்னியாகுமரிக்கு முதலில் வரும்போது எனக்கு மீசைகூட சரியாக முளைக்கவில்லை என மக்கள் சந்திப்பு யாத்திரையில் கமல் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

கமல்

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்காகக் கமல் நேற்று (15.5.2018) இரவு கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். இன்று காலை 6.30 மணிமுதலே பல்வேறு நிர்வாகிகளை ஹோட்டலில் சந்தித்தார். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டின்படி சரியாக 9 மணிக்கு ஹோட்டலிலிருந்து புறப்பட்டார். அவருக்கு கேரள சிங்காரிமேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திறந்த வாகனத்தில் கடற்கரை சாலையில் புறப்பட்ட கமல் கடல் அழகை தனது மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டார். நேராகக் காந்திமண்டபம் சென்ற அவர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்கினார். அங்கு கூடிநின்று ஆரவாரம் செய்த சுற்றுலாப் பயணிகளிடம், `உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்றார்.

கமல்

அடுத்ததாகக் கன்னியாகுமரி ரயில்வே ஜங்ஷனில் பேசிய கமல், "சினிமாவில் நடிப்பதற்காக 40 வருடத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு பஸ்ஸில் வந்து இறங்கினேன். அப்போது சிறுவனான எனக்கு மீசைகூட சரியாக முளைக்கல. அதன் பிறகு, நடுவில் விமானத்திலும் காரிலும் ரயிலிலும் குறுக்கும் நெடுக்குமாக இந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறேன். இப்போது மக்களைக் காணவும் மக்களுடன் பேசி கருத்துகளைக் கேட்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இது மக்கள் நீதி மய்யத்தின் கல்வி யாத்திரையாக நான் நினைக்கிறேன். மக்களை அறிந்துகொள்ளும், மக்களின் குறைகளைத் தெரிந்துகொள்ளும் கல்வி யாத்திரையாக நினைக்கிறேன். இதற்குமேல் நான் இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். உங்கள் அன்புக்கு நன்றி" என்றார். தொடர்ந்து கமல்ஹாசனின் மக்களைச் சந்திக்கும் பயணம் நடந்துகொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!