ஜெனீவா ஏலத்தில் 300 ஆண்டுகள் பழைமையான இந்திய வைரம்!

ஐரோப்பா அரசக் குடும்பத்தினர் கையில் 300 ஆண்டுகளாக இருந்த பழைமையான வைரம் ஜெனீவாவில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

வைரம்

(PC - Reuters)

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த கோல்கொண்டா வைரச் சுரங்கத்திலிருந்து, 17-ம் நூற்றாண்டில் 6.16 காரட் மதிப்புள்ள நீல நிற வைரம் ஒன்று 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது. இந்த வைரத்தை, அப்போதைய அரசக் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் பார்னீஸிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த வைரத்தை 1715-ம் ஆண்டு நடந்த தன் மகள் பரிமா பிரபுவுக்குத் திருமண பரிசாக வழங்கினர். 

அதன்பிறகு, அவர்களின் குடும்பத்தினர் மற்ற ஐரோப்பிய வம்சாவழியைச் சேர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்துகொண்டனர். இதனால், இந்த வைரம் ஐரோப்பாவில் இருந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தது. 

இந்த நிலையில், அரசக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த நீல நிற வைரம் ஜெனீவாவில் நேற்று ஏலத்துக்கு வந்தது. இதை, இந்திய மதிப்பில் தோராயமாக 45 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. மேலும், அந்த ஏலத்தின்போது விலை மதிப்புள்ள இரண்டு நகைகள் விற்கப்பட்டது. இந்த இரண்டு நகைகளும் 54 கோடிக்கு விற்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!