வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (16/05/2018)

கடைசி தொடர்பு:19:32 (18/05/2018)

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள்; புதுச்சேரியில் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்

புதுச்சேரியில் இன்று வெளியான ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்.

நாரயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட முதல்வர் நாராயணசாமி, “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 15,075 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 5,842 மாணவர்கள் மற்றும் 7,321 மாணவிகள் என மொத்தம் 13,163 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 87.32%. இது கடந்த ஆண்டைவிட 0.64% அதிகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 51 பள்ளிகள் 100% சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது. அதில் அரசுப் பள்ளி ஒன்றும் அடக்கம். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வேதியியல், கணிப்பொறி, அறிவியல், கணக்கு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் என 327 மாணவ மாணவிகள் 200/200 எடுத்துள்ளனர். மேலும், இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம். வரும் காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க