`பொறுத்திருந்து பாருங்கள்!’ - கர்நாடகா தேர்தல் விவகாரத்தில் தமிழிசை உறுதி

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தமிழிசை

அப்போது தமிழிசை சவுந்தரராஜன்,

“கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைத்தால்தான் தமிழகத்துடன் கர்நாடக அரசு நல்லுறவு ஏற்படும். மதச்சார்பற்ற ஜனதா தளம் பி.ஜே.பி- க்கு ஆதரவாகவும் காங்கிரஸுக்கு எதிராகவும் இருந்துள்ளது. கர்நாடகாவில் தேர்தல் சதவிகிதத்தைப் பார்க்காதீர்கள், கர்நாடகாவில் பி.ஜே.பி-க்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்துள்ளார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனநிலையை இது குறிக்கிறது. எனவேதான் மொத்த மக்களும் பி.ஜே.பி-க்குதான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் கர்நாடகத் தேர்தல் காண்பிக்கிறது.

பி.ஜே.பி 104 இடம்தான் பிடித்துள்ளது என்று சொல்ல வேண்டாம். கடந்த தேர்தலில் வெறும் 40 இடத்தில் இருந்த நாங்கள், தற்போது 104 இடத்துக்கு வந்துள்ளோம். கர்நாடகாவில் பி.ஜே.பி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படாமல் மத்திய அரசு செயல்படும். மத்திய அரசுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது. பி.ஜே.பி மதம்சார்ந்த கட்சி என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், மத சார்புள்ள கட்சி காங்கிரஸ்தான். கர்நாடகாவில் பிரிவினையைத் தூண்டியவர்களான வாட்டாள் நாகராஜ், சித்தராமையா போன்றவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவரிடம், பி.ஜே.பி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில் எப்படி கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற கேள்விக்கு தமிழிசை, `பொறுத்திருங்கள். அங்கு நிச்சயம் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!