வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (16/05/2018)

துப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டி பறிமுதல்..! மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவின்போது உள்ளே புகுந்த கும்பல் துப்பாக்கி முனையில் ஓட்டுப்பெட்டியை எடுத்துச் சென்றது. 

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ம் தேதி திங்கள்கிழமையன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அதில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். 50 பேர்வரை காயமடைந்தனர்.

அதையடுத்து, 568 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று 568 வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, மால்டா மாவட்டத்தின் ரட்வா பகுதியிலுள்ள 76-ம் வாக்குச் வாவடிக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டியை எடுத்துச் சென்றது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.