வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (16/05/2018)

கடைசி தொடர்பு:18:22 (16/05/2018)

இரண்டாண்டு இடைவெளிக்குப் பின்.. மீண்டும் `விஜய் டிவி விருதுகள்'!

இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்

சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் என ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சினிமா விருதுகளை வழங்கி வந்தது விஜய் டிவி. `விஜய் அவார்ட்ஸ்' என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விழாவில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வந்தனர். 

விஜய்

2006-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த `விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை. பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு எப்படியும் விழா நடத்தியே ஆகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த விஜய் டிவி, வரும் மே 26 அன்று அந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் சிறந்த ஹீரோக்களுக்கான நாமினி லிஸ்டில் இடம்பிடித்திருக்க, பொதுமக்கள் பங்கெடுக்கும் இணையதள வாக்கெடுப்பும் தொடங்கி விட்டது.