ஊட்டியில் கனமழை! கோடைவிழா படகுப் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு | Ooty summer boat race postponed after heavy rain

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (16/05/2018)

ஊட்டியில் கனமழை! கோடைவிழா படகுப் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததையடுத்து இன்று தொடங்கவிருந்த கோடை விழா படகுப் போட்டிகள் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததையடுத்து, இன்று தொடங்கவிருந்த கோடை விழா படகுப் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஊட்டியில் கனமழை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த  இரண்டு வாரங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர்த் தட்டுப்பாடு குறைந்துள்ளது. இந்நிலையில் ஊட்டி படகு இல்லத்தில் கோடை விழாவின் ஒரு பகுதியாக படகுப் போட்டிகள் நடத்தப்படவிருந்தது. காலை சுமார் 11.00 மணிக்குப் படகு போட்டியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுமார் 10.30 மணி முதல் பெய்யத் தொடங்கிய கன மழை ஒரு மணியாகியும் குறையவில்லை. மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

கனமழையால் ஊட்டியின் முக்கியப் பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நகராட்சி மார்க்கெட் முழுவதும் சாக்கடை மற்றும் மழை நீரால் நிரம்பியது. அதேபோல ஊட்டி பஸ் ஸ்டாண்டு, படகு இல்லம் செல்லும் ரோட்டில் ரயில்வே நுழைவுப் பாலத்தின் அடியில் தேங்கிய நீரால், போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் மழை தொடரும்பட்சத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க