ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

நெல்லையில் தனியார் கல்லூரி பேராசிரியரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நெல்லை மாநகரக் காவல்துறை கைது செய்துள்ளது.

நெல்லையில் தனியார் கல்லூரி பேராசிரியரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நெல்லை மாநகரக் காவல்துறை கைது செய்துள்ளது.

ராக்கெட் ராஜா

நெல்லை பாளையங்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர், கொடியன்குளம் குமார். இவருக்கும் சிலருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பான பகை இருந்துள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 26-ம் தேதி இவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கும்பல் வீட்டினுள் நுழைந்துள்ளது. அப்போது கொடியன்குளம் குமார் ஓடித் தப்பிய நிலையில் அங்கிருந்த அவரது மருமகனும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியருமான செந்தில்குமார் என்பவரை வெடிகுண்டுகளை வீசியும் அறிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக டாக்டர் பாலமுருகன், வழக்கறிஞர் பாலகணேசன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 9 பேர் பிடிபட்ட நிலையில், பாலமுருகன், பாலகணேசன் உள்ளிட்டோர் மட்டும் தலைமறைவாக இருந்தனர். இவர்களில் ராக்கெட் ராஜாவை சென்னைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்ட அவரை இந்த வழக்கு தொடர்பாக நெல்லை காவல்துறையினர் அழைத்து வந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில், பேராசியர் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கூட்டாளிகளான அந்தோணி, ராஜசேகர், மைக்கேல் அஸ்வின், கார்த்திக் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க துணை ஆணையாளர் சுகுணாசிங், பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் பரிந்துரைத்தனர். அதனை ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நெல்லை காவல்துறை ஆணையாளர் கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!