ஏற்காடு கண்காட்சியில் அசத்திய அத்தி வகை நாய்..! | Athi dog won the first prize at the Yercaud Dog Exhibition

வெளியிடப்பட்ட நேரம்: 01:05 (17/05/2018)

கடைசி தொடர்பு:10:42 (17/05/2018)

ஏற்காடு கண்காட்சியில் அசத்திய அத்தி வகை நாய்..!

ஏற்காடு கோடை விழாவை, கடந்த 12-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.  இறுதி நாளான இன்று (16-ம் தேதி) வரை நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நாய்கள் தங்கள் உரிமையாளர்களோடு கலந்துகொண்டன. இதில், ஏற்காடு செம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த மேகநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் மோகன் ராஜேஸுக்குச் சொந்தமான அத்தி, முதல் பரிசைப் பெற்றது.

அத்தியை அழைத்து வந்த மேக நாடு எஸ்டேட்டின் மேலாளர் சங்கர், ''ஏற்காட்டிலேயே அத்தி வகை நாய் எங்களிடம் மட்டுமே உள்ளது. நாங்கள் 5 நாய்கள் வைத்திருக்கிறோம். இவை, ஜெர்மன் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை. இந்த வகை நாய்களை பனிப் பிரதேசங்களில் வண்டிகள் இழுக்கப் பயன்படுத்துவார்கள். இவை வாழ்வதற்கு அதிக குளிர்ச்சி இருக்க வேண்டும். அதிக உணவு உட்கொள்ளாது. ஒரு நாளைக்கு 200 கிராம் உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். தலையை கீழே தொங்கப் போடாது.

உடலில் முடிகள் அடர்த்தியாக இருக்கும். உடல்மீது எவ்வளவு தண்ணீர் விழுந்தாலும் நனையாது. பழகினால் குழந்தையைப் போல பழகும். முதல் பரிசு பெறும் என்ற நம்பிக்கையோடு தான் அழைத்து வந்தோம். அதேபோல, முதல் பரிசு பெற்றிருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்காடு கோடை விழா நாய்கள் கண்காட்சி, வரலாற்றிலேயே முதன் முறையாக அத்தி வகை நாய் கலந்துகொண்டது இதுவே முதன் முறை. பங்கேற்ற முதல்முறையே முதல் பரிசு பெற்றிருக்கிறது. இதில் கூடுதல் அம்சம் என்னவென்றால், இந்த நாய் பிறந்து 6 மாதங்கள் தான் ஆகிறது'' என்றார்.