`தேர்வில் தோல்வியடைந்த மகன்' - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தந்தை! | father gives grand party to relatives for Son fails in board exams in madhyapradesh

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (17/05/2018)

கடைசி தொடர்பு:11:07 (17/05/2018)

`தேர்வில் தோல்வியடைந்த மகன்' - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தந்தை!

`தேர்வில் தோல்வியடைந்த மகன்' - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தந்தை!

தேர்வில் தோல்வியடைந்தால், பிள்ளைகளை திட்டித்தீர்க்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். சில சமயங்களில் பெற்றோரின் பேச்சு பிள்ளைகளை தற்கொலை வரை கூட தூண்டிவிடும்.  தோல்வியை குத்திக்காட்டாதீர்கள், ''தட்டிகொடுங்கள்... 'முயன்று பார் அடுத்த முறை வெற்றி பெறலாம்...'  என்பன போன்ற ஆறுதல் வார்த்தைகள் கூறுங்கள்'' என்று மனோதத்துவ நிபுணர்கள்  பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறார்கள். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த  தந்தை ஒருவர், தன் மகன் தேர்வில் தோல்வியடைந்ததால், திட்டுவதற்குப் பதிலாக பட்டாசு  வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சுரேந்திர குமார் வியாஸ் என்பவரின் மகன், அசு. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் அவர் தோல்வியடைந்தார். உடனடியாக வீடு அலங்கரிக்கப்பட்டது. வீட்டு முன் ஷாமியானா அமைக்கப்பட்டது. சுரேந்திர குமார் வியாஸ் உறவினர்கள்  மற்றும் நண்பர்களை விருந்துக்கு அழைத்தார். பின், மகனை கேக் வெட்டச் சொல்லி, அனைவருக்கும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. 

சுரேந்திர குமார் கூறுகையில், 'இந்த தருணத்தில்தான் என் மகனுக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும். தேர்வில் வெற்றிபெற, அவன் மேற்கொண்ட முயற்சியை நான் பாராட்ட விரும்பினேன். தேர்வுத் தோல்வி, மாணவர்களை தற்கொலை முடிவுக்குச் செல்லவைத்து விடுகிறது. இதற்காக, விலை மதிப்பில்லாத வாழ்க்கையை  முடித்துக்கொள்ளக் கூடாது. தேர்வையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது'' என்று சொல்கிறார். 

மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறுவதாக விழா மேடையிலேயே தந்தைக்கு அசு வாக்குறுதி அளித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க