வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (17/05/2018)

கடைசி தொடர்பு:12:40 (17/05/2018)

குரூப் உருவாக்கியவரை வெளியேற்ற முடியாது - வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் அறிமுகம்

குரூப் அட்மின்களுக்குக் கூடுதல் வசதி... வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து வெளியேறுபவர்களை மீண்டும் சேர்ப்பது கடினம்... @ பட்டன் அறிமுகம்... இதுதான் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்ஸ். 

வாட்ஸ் அப்

மொபைல் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், எந்த அப்ளிகேஷனாக இருந்தாலும் அதை மிகவும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அவசியம். இதற்கேற்ப வாட்ஸ் அப் குரூப்களிலும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டிருகின்றன. 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் போனில், புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்தவர்கள், தங்களின், குரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும். குரூப் அட்மின்களுக்குக் கூடுதல் வசதி அறிமுகமாகியுள்ளது. அதாவது, இனி குரூப் உருவாக்கும் போது, டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் குரூப் பற்றின விவரங்களை எழுத முடியும். இதனை, குரூப்பில் உள்ளவர்களும், புதியதாய் குரூப்பில் சேர்க்கப்படுபவர்களும் பார்க்கலாம். 

வாட்ஸ் அப்

மேலும், தங்களின் தேவைக்கேற்ப குரூப் அட்மின் மற்றும் குரூப்பில் உள்ளவர்கள் டிஸ்க்ரிப்ஷனை மாற்றிக் கொள்ள முடியும் அல்லது மற்றவர்களுக்கு அனுமதி வழங்காமல் குரூப் அட்மின் மட்டும் டிஸ்க்ரிப்ஷனை மாற்றிக்கொள்ளலாம். இதேபோன்று, குரூப் சப்ஜட், ஐகான்களை யார் மாற்ற வேண்டும் எனவும் குரூப் அட்மின்கள் முடிவு செய்துகொள்ளலாம். இத்துடன்,  குரூப்களில் மென்ஷன், கேட்ச் அப், @ பட்டன் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் பழைய குரூப்களுக்கும், புதியதாய் உருவாக்கப்படும் குரூப்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப்

இனி குரூப்பில் உள்ளவர்களைத் தேட இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை கிளிக் செய்தாலே போதும். மேலும், குரூப் உருவாக்கியவரை இனி குரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. மேலும், ஸ்பேம் இன்விடேஷன் அளவைக் குறைக்க, குரூப்பிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளது.