மீண்டும் விலை உயர்ந்துள்ளது பஜாஜ் டொமினார்

கடந்த ஏப்ரல் மாதம்தான் ரூ.2000 விலை கூடியது டொமினார். 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு விலை அதிகரிப்பு...

பஜாஜின் டொமினார் 400 பைக்கின் விலை ரூ.2000 உயர்ந்துள்ளது. தற்போது இதன் ஆன்ரோடு விலை ரூ.1.65 லட்சம் ( non-abs) மற்றும் ரூ.1.80 லட்சம்( abs). கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்த பைக்கின் விலையை 2000 ரூபாய் வரை உயர்த்தியது இந்நிறுவனம். மீண்டும் விலை உயர்த்துவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.

டொமினார் 390


பஜாஜின் விலை உயர்ந்த பெர்ஃபார்மன்ஸ் பைக் டொமினார் 400. டிசம்பர் 2016-ல் விற்பனைக்கு வந்த இந்த பைக், தற்போதைய விலை உயர்வையும் சேர்த்து இதுவரை ரூ.1000 விலை கூடியுள்ளது. டொமினாரை விற்பனைக்குக் கொண்டு வரும்போது மாதம் 10,000 பைக்குகள் எனும் விற்பனை இலக்கைக் கொண்டுள்ளதாகக் கூறியது இந்நிறுவனம். ஆனால், தற்போது வரை மாதம் 3000 பைக்குகளே விற்பனையாகிறது. தனது பைக்குகளுக்கு விலையைக் குறைவாக வைத்து அதிக விற்பனையை எடுக்கும் பஜாஜின் யுத்தி தோற்றுவிட்டதால் டொமினார் பைக்குகளின் விலை கூடிக்கொண்டே வருவதாகத் தெரிகிறது.

வசதிகள்

போட்டியாளர்களான மஹிந்திரா மோஜோ UT ரூ.1.64 லட்சத்துக்கும், ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 ரூ.1.61 லட்சத்துக்கும் கிடைக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று புதிய நிறங்களிலும், தங்க நிற அலாய் வீலுடனும் டொமினாரைக் களமிறக்கியது பஜாஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!