நகரத்துக்கு விசிட் அடித்த யானைக்குட்டி!

நகரத்துக்கு வந்த குட்டி யானைக்கு மக்கள் உணவு வழங்கினர்.

நகரத்துக்கு விசிட் அடித்த யானைக்குட்டி!

கேரளாவில், ஊருக்குள் புகுந்த அழகான குட்டியானையுடன் மக்கள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வனத்துறையினர் அதை மீட்டு, தாயுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

தாயை பிரிந்த குட்டி

இடுக்கி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிகம். வனப்பகுதியை ஒட்டிய  சாலைகளிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். அப்படி, தாயுடன் சாலைப் பகுதிக்கு வந்த குட்டியானை ஒன்று, கூட்டத்தை விட்டுப் பிரிந்ததால் தவித்துள்ளது. பின்னர், சின்னக்கன்னல் என்ற சிறிய நகரத்துக்குள் புகுந்த குட்டி, செய்வதறியாமல் சுற்றிச்சுற்றி வந்துள்ளது. யானைக்குட்டி தனியாகச் சுற்றி வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அதற்கு பால், பழம் என உணவு வகைகளை அன்புடன்  கொடுத்தனர்.

தாயை விட்டுப் பிரிந்த ஏக்கத்தினால் குட்டி எதையும் ஏற்கவில்லை. குட்டியைப்  பார்க்க மக்கள் கூடினர். சிலர், குட்டியுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் அதை மீட்டு, கொண்டு சென்றனர். வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் குட்டியை விட்டு, தாய் யானையின் வருகைக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!