`எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிப்பாரா..?’ வேலூர் ஜோதிடரின் ஆச்சர்ய ஆரூடம்

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி தொடருமா என்று வேலூர் ஜோதிடர் பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார். 

எடியூரப்பா

வேலூரைச் சேர்ந்த பிரசன்ன ஜோதிடர் லோகேஷ்பாபு தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்துவருகிறார். கடந்த 2016-ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினார். அதன்படி நடந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படும் என்று கூறினார். அதுவும் நடந்தது. ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவார் என்று அவர் கணித்ததும் நடந்தது. குஜராத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். அதுவும் நடந்தது. சமீபத்தில் நடந்த கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினார். அதன்படி நீண்ட இழுபறிகளுக்கு நடுவில் முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். 
15 நாளில் பெருபான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பாவால் பெருபான்மையை நிரூபிக்க முடியுமா இல்லை பா.ஜ.க ஆட்சி கவிழந்து மீண்டும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி மலருமா என்றுஎடியூரப்பா ஜோதிடர் லோகேஷ்பாபுவிடம் கேள்விகளைக் கேட்டோம். 

பகவதியம்மனிடம் அருள்பெற்றுவிட்டு பதில் சொல்கிறேன் என்று தெரிவித்த அவர், சிறிது நேரத்துக்குப் பின் நம்மை தொடர்புகொண்டார். "மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார் எடியூரப்பா.  இரண்டு கட்சிகளிலிருந்து மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவளிப்பார்கள்" என்றவர், சிறிது அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார். "பா.ஜ.க-வுக்கு ஆதரவளிக்கும் கட்சி இரண்டாக உடையும். அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். பா.ஜ.க ஆட்சியில் நிச்சயம் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!