`பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?' - அதிர்ச்சித் தகவல்

நள்ளிரவில் மக்களுக்கு மற்றோரு அதிர்ச்சி கிடைக்கலாம்.

`பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?' - அதிர்ச்சித் தகவல்

ர்நாடக தேர்தல் முடிவடைந்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

பெட்ரோல் விலை அதிகரிப்பு

அதன்படி, இன்று இரவு பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும் டீசல் 3.50 பைசா வரையும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது டெல்லியில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.32. ஆக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் இதுதான் அதிகபட்ச விலை ஆகும். டீசல் விலை லிட்டர் ரூ.66.79 இதுவும் அதிகபட்சம்தான். மும்பையில் பெட்ரோல் விலை ரூ.82.94, டீசல் விலை ரூ.70.88 ஆக இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.77. 93, டீசல் ரூ.70.25 ஆக உள்ளது. கடந்த 19 நாள்களாக கர்நாடக தேர்தல் காரணமாக எண்ணெய்  நிறுவனங்கள் விலை மாற்றம் செய்யவில்லை. கர்நாடகத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தபிறகு கடந்த திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. 

பெட்ரோல் விலை, டீசல் விலை இரு காரணிகளால் மாற்றத்திற்குள்ளாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வது அல்லது குறைவது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 79.47 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவது இரண்டாவது காரணி. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, மேலும் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு 68 ரூபாய் இந்திய மதிப்பாக உள்ளது. இதனால்,  கடந்த 19 நாள்களில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் மேற்கொள்ளாததால் ரூ.500 கோடி வரை இழப்பை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!