` நம்பக் கூடாதவர்களை நம்பிவிட்டேன்!'  -  கலங்கிய பி.ஜெ.

இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பி.ஜெ எனப்படும் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்ட விவகாரம். ' நம்பக் கூடாதவர்களை நம்பியதுதான் நான் செய்த தவறு' என தன்னை சந்திக்க வந்தவர்களிடம் வேதனைப்பட்டிருக்கிறார் பி.ஜெ. 

ஜெய்னுல் ஆபிதீன்

ஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பி.ஜெ எனப்படும் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்ட விவகாரம். ' நம்பக் கூடாதவர்களை நம்பியதுதான் நான் செய்த தவறு' என தன்னை சந்திக்க வந்தவர்களிடம் வேதனைப்பட்டிருக்கிறார் பி.ஜெ. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உயர்நிலைக் குழு நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி, தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் ஜெய்னுல் ஆபிதீன். ' செல்போனில் பெண்ணுடன் தவறாகப் பேசியதை பி.ஜெ ஒப்புக் கொண்டார்' என டி.என்.டி.ஜே இணையத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலமாக பி.ஜெ உருவாக்கி வைத்திருந்த செல்வாக்கு, ஒரேநாளில் சரிந்துவிட்டது. இந்த விவகாரத்தை இஸ்லாமிய அமைப்பில் உள்ள இளைஞர்கள் சிலர், அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி ஒருவர், `` பி.ஜெ செய்த மிகப் பெரிய தவறு என்பது, இத்தனை ஆண்டுகளில் அதிகப்படியான எதிரிகளை அமைப்புக்குள் சம்பாதித்துக் கொண்டதுதான். அவரால் பழிவாங்கப்பட்ட நிர்வாகிகள் பலரும், இந்த விவகாரத்துக்குப் பின் ஒன்று கூடியுள்ளனர். 

ஜெய்னுல் ஆபிதீன்ஜமாத்தில் கொஞ்சம் செல்வாக்கோடு யார் வளர்ந்தாலும், அவர்களை வீழ்த்துவதில் உறுதியாக இருந்தார் பி.ஜெ. இந்த விவகாரம் நீர்த்துப் போன பிறகு, மீண்டும் தவ்ஹீத் ஜமாத்துக்குள் கால் வைக்கும் முடிவில் இருக்கிறார் பி.ஜெ. ' அப்படி அவர் உள்ளே வந்துவிட்டால், அவரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது' என்ற அச்சத்தில், பி.ஜெ தொடர்பான சொத்து விவரங்களை ஒரு குரூப் சேகரித்துக் கொண்டிருக்கிறது. மண்ணடியில் இருக்கும் இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகள், கொடுங்கையூரில் புதிதாகத் திறக்கப்பட உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட், அவரது மருமகனுக்காக 'நியூ டே' என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள ஆடை விற்பனைக் கடை உள்ளிட்டவை வெளியே தெரிந்த சொத்துக்கள். இதைத் தவிர, ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். அதுதொடர்பான அனைத்து விவரங்களும் சர்வே எண்ணுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாள்களில் அந்த விவரங்களையும் இணையத்தளத்தில் வெளியிட உள்ளனர். தவ்ஹீத் ஜமாத்துக்குள் அவர் எந்தக் காலத்திலும் வர முடியாத அளவுக்கு அனைத்துக் காரியங்களும் நடைபெற்று வருகின்றன" என்றார் விரிவாக. 

அதேநேரம், ' தலைவனாக இருந்தாலும் தூக்கியெறிய தவ்ஹீத் ஜமாத் தயங்காது என்பதை மக்களிடம் நிரூபிப்பதற்காக இந்த ஆடியோ விவகாரத்தை ஒத்துக்கொண்டார் பி.ஜெ. இது தலைமை நிர்வாகிகளுக்கும் தெரியும். அதனால்தான் விளக்க வீடியோவில் எதுவும் தெரியாததுபோல அமைதியாக அமர்ந்திருந்தனர். ஜமாத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் பி.ஜெ செய்த தியாகம் இது. எனவேதான், விபசாரப் பழியை அவர் ஏற்றுக் கொண்டார்' என சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் கருத்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில், யார் கண்ணிலும்படாமல் ஒதுங்கியிருந்த பி.ஜெ, மண்ணடியில் உள்ள தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டின் வியாபாரத்தைக் கவனிக்க இன்று வந்திருந்தார். 'யாராவது விசாரிப்பார்கள்' என்பதை அறிந்து, கல்லாவில் அமர்ந்து பில் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து தன்னுடைய உறவினர்களிடம் மனம் திறந்து அவர் பேசியிருக்கிறார். ' செய்யக் கூடாததை செய்துவிட்டேன். நம்பக் கூடாதவர்களை நம்பிவிட்டேன். நம்ப வேண்டியவர்களுக்கு மனக்கஷ்டத்தை உருவாக்கி வெளியேற்றிவிட்டேன். நான் செய்தது தவறான செயலாக இருந்தாலும்கூட இந்தச் சூழ்நிலையில் யார் என்னை உண்மையாக நேசித்தார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்' எனக் கூறிவிட்டு கதறியழுதிருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளனர் அவரது உறவினர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!