நிர்மலாதேவி விவகாரம்: மீண்டும் விசாரணையில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி,  நிர்மலாதேவி, உதவிப்பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதற்கு மேல் யாரிடமும் விசாரணையை தொடராமல் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்வதில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டது. ஆளுநர் நியமித்த சந்தானம் விசாரணைக் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதும் யாருக்கும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் முக்கியமான நபர்களை தப்பவைக்க  இரண்டு வகையான விசாரணையும் செயல்படுவதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. 

நிர்மலாதேவி விவகாரம்

சமீபத்தில் ஆளுநர் விருதுநகர் மாவட்டம் வந்து சென்றார். அவரது வருகையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் எஸ்.பி ராஜேஸ்வரி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீஸார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மு.வ. அரங்கத்தில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என 36 பேர் நேற்று விசாரிக்கப்பட்டனர். மீதமுள்ள 50 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் விசாரணையால் நிர்மலாதேவி விவகாரத்தில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. கல்வி ஆராய்ச்சி கருத்தரங்குகள் நடைபெற்ற பல்கலைக்கழகத்தில், கல்லூரி மாணவிகளை பாலியலுக்குப் பயன்படுத்த நினைத்த குற்றவழக்கு அடிப்படையில்  விசாரணை நடைபெறுவது, இதுவே முதல் முறை என்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!